
கஜகஸ்தானில் நடக்கும் டபிள்யு.டி.டி. கன்டெண்டர் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் சக இந்திய ஜோடியான தியா, யாஷஸ்வினி இணையை 3-1 என்ற செட் கணக்கில் சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி வீழ்த்தியது.
இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி ஜப்பானின் மியு ஹிரானோ மற்றும் மியூ கிஹாரா ஜோடியை இன்று எதிர்கொள்கிறது.