
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்ட நிலம் கிடைக்கவில்லை எனக் கூறி அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் உதவி கோரியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக நிலம் வாங்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை என்றும், அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையில் நிலம் வாங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2025-26 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.23.84 கோடி வரி செலுத்தி, அம்மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராக ரிஷப் பண்ட் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.