
இந்தியாவில் ஐபோன் 18 இன்று விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களின் முன்பு அதிகாலை முதலே இளைஞர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கடந்த 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் டுயோவின் இந்திய விலை 2.99 லட்சம் ரூபாயாகவும், ஐபோன் 18 புரோ விலை 1.65 லட்சம் ரூபாயாகவும், புரோ மேக்ஸ் விலை 1.79 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை விட இந்தியாவில் இந்த மாடல் போன்களின் விலை அதிகமாக விற்கப்படும் நிலையில், இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி தொடங்கியது.