
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களுக்கான ஏர் இந்தியா விமான சேவை அக்டோபர் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.