
நீண்ட தூரப் பயணத்திற்குப் பிறகு மின்சார வாகனங்களை உடனடியாக சார்ஜ் செய்வது பேட்டரியின் செயல்திறனைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பேட்டரி அதிக வெப்பநிலையில் இருக்கும்போது சார்ஜ் செய்வது வெப்ப அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், வாகனத்தை ஓட்டி முடித்தவுடன் சார்ஜ் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்தியாவின் வெப்பமான காலநிலைக்கு ஏற்ப பேட்டரி வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் புதிய குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு செய்து வருகிறது.