
துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் நேரடி ரயில் பாதை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதிகளில் அதிகரித்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள இந்த மாற்றுப் போக்குவரத்து வழித்தடம் அவசியம் என்று ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் சாத்தியமானால், ரஷ்யா மற்றும் இந்தியா இடையே நிலப்பரப்பு வழியாக நேரடி சரக்கு ரயில் போக்குவரத்து வசதி உருவாகும்.