Indian Politics
காவல் நிலைய சில்லறை செலவின நிதி உயர்வு

காவல் நிலைய சில்லறை செலவின நிதி உயர்வு

Polimer News1h
THE BRIEF
1

தமிழ்நாட்டின் அனைத்து காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2

மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் எதிர்பாராச் செலவு நிதி சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப காவல் நிலையங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

3

இதன்படி எதிர்பாராச் செலவு நிதி முறையே ரூ.3,750-இல் இருந்து ரூ.30,000-ஆகவும், ரூ.6,000-இல் இருந்து ரூ.40,000-ஆகவும், ரூ.8,250-இல் இருந்து ரூ.50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.