
கனடாவின் எட்மண்டன் நகரில் ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த 'சார்டோன்' என்ற நாய், 56 மனிதர்களின் முதுகின் மீது 16 விநாடிகளில் தாவிக்குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில், வரிசையாக குனிந்து நின்ற தன்னார்வலர்களை நாய் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.
பயிற்சியாளர் ஜெனிபர் பிரேசர் அளித்த நுணுக்கமான பயிற்சியால், மனிதர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் இந்த சாதனையை நாய் நிகழ்த்தியுள்ளது.