
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கொழும்பில் களமிறங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 57.78 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதிய 47 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 23 வெற்றிகளையும், இலங்கை 7 வெற்றிகளையும் பெற்றுள்ளன; 17 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.