
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தனது 13 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமாரை அஸ்வின் தேர்வு செய்துள்ளார்.
சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்கள் இந்த அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என அஸ்வின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 36 வயதான புவனேஷ்வர் குமாரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.