/polimer-news/media/media_files/2026/09/21/untitled-design-50-2026-09-21-19-34-05.png)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2027 சீசனை முன்னிட்டு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் 2026 ஜூலை மாதம் விலகியதைத் தொடர்ந்து இவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஜாகீர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், மும்பை மற்றும் லக்னோ அணிகளிலும் நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்றுள்ளார்.