
பெங்களூருவில் நடந்த துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணிக்காக விளையாடிய முகமது ஷமி தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 900 விக்கெட்டுகளை எட்டினார்.
இந்த மைல்கல்லை எட்டிய 6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஷமி, மத்திய மண்டல அணியின் யாஷ் ரத்தோர் மற்றும் அர்ஷத் கான் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், கிழக்கு மண்டல அணி 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களுடன் விளையாடி வருகிறது.