செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை 11 நாட்களாகியும் கண்டுபிடிக்காத தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றும், முதல்வர் தன் பொழுதுபோக்கை விட்டுவிட்டு குழந்தையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார்.