
அமரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களுக்கு ஈரானின் புரட்சிகரக் காவல் படை கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவையும் தேவையற்ற வெளிநாட்டுப் போர்களையும் எதிர்க்க வேண்டும் என 25 பக்கங்கள் கொண்ட மடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறினால் இரு நாடுகளும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என ஈரான் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.