
சென்னையில் சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, இந்த சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி ஆணையர் சமீரன் இந்த சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ள நிலையில், ஏற்கனவே 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு மறுமதிப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சொத்து வரி உயர்வு குறித்து அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த ஆலோசனையும் வரவில்லை என்று சென்னை மாநகர மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.