
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான ‘மொத ராத்திரி’ படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.
ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான 2 வாரங்களில் ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்முறை இயக்குபவரின் இந்த முயற்சியை பாராட்டிய தனுஷ், குடும்பத்துடன் திரையரங்குகளில் இப்படத்தைக் காணுமாறு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.