
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லஞ்சம் தர முயன்ற நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதிலோ என்ன சிக்கல் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும் அதிமுகவின் இன்பதுரை உள்ளிட்ட தலைவர்களும் விளக்கம் கோரியுள்ளனர்.