ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பத்து நாட்டிகல் மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இப்போட்டியில் 26 படகுகள் பங்கேற்றதுடன், ஒவ்வொரு படகிலும் 6 வீரர்கள் களமிறங்கி காற்றின் வேகத்தோடு போட்டியிட்டனர்.
ஜல்லிக்கட்டைப் போன்ற மீனவர்களின் இந்த வீரப்போட்டிக்கு 'மண்டாடி' திரைப்படத்திற்குப் பிறகு மக்கள் மத்தியில் கவனம் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.