
நடிகை ஸ்ரீலீலா தனது சிறுவயதில் பரதநாட்டியம் ஆடிய பழைய காணொளியை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
2019-ல் 'கிஸ்' படம் மூலம் அறிமுகமான ஸ்ரீலீலா, 'தமகா' மற்றும் 'குண்டூர் காரம்' போன்ற படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழில் 'பராசக்தி' படத்தில் அறிமுகமான அவர், தற்போது அனுராக் பாசு இயக்கும் காதல் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.