/nakkheeran/media/media_files/2026/10/02/dharapuram-mks-road-show-2026-10-02-12-19-13.jpg)
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து, திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலருமான மு.க.ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் ரோடு ஷோ மற்றும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
மு.க. ஸ்டாலின் திறந்த வாகனத்தில் பேரணியாகச் சென்று தாராபுரம் - உடுமலை சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இன்று மாலை அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.