
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் மனிஷா பான்வாலா மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்ட மனிஷா, ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்திந்தாலும் 8-6 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
இந்தத் தொடரில் நீலம் சிரோஹி மற்றும் காஜல் தோசக் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.