
நடிகை நயன்தாரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய கற்பனை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தனது 22 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கடந்துள்ளார்.
தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.