
கோவை மாநகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்த பா.ஜ.வுக்கு அனுமதி மறுத்த காவல் துறையின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடந்த விசாரணையில், வரும் 18-ம் தேதி மாலை 4:00 முதல் 7:00 மணி வரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
எதிர்காலத்தில் தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி கோருபவர்களுக்கு தேவையற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது என தமிழக காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.