
ராட்சசி மற்றும் கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கிய கவுதம் ராஜ் இயக்கத்தில், ஆர்யா வழங்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
'பஞ்சதந்திரம்' படத்தில் கமல் ஜோடியாக நடித்த சிம்ரன், இப்படத்தில் முதன்முறையாக நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
முன்னதாக வெளியான இயக்குநரின் படங்கள் சீரியஸ் கதைகளாக இருந்த நிலையில், இந்த புதிய படம் காதல் கலந்த காமெடியாக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.