
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 28 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டும், கர்நாடகா இதுவரை 10.38 டிஎம்சி மட்டுமே திறந்துள்ளதாக காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மொத்தமாக 54.19 டிஎம்சி தண்ணீர் வர வேண்டியுள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.