
ஜிம்பாப்வே தொடரில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஐசிசி டி20 தரவரிசையில் 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் இரண்டு அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே தொடருக்கான தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.
தற்போது டி20 பேட்டிங் தரவரிசையில் இஷான் கிஷன் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.