
சென்னையில் நிலவும் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தலைவலி, இருமல், சளி மற்றும் தொண்டை கரகரப்புடன் கூடிய இந்த காய்ச்சல் பாதிப்பு சுமார் 5 நாட்கள் வரை நீடிப்பதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.