
அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச ரேபிட் அண்டு பிளிட்ஸ் செஸ் தொடரில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் முடிவில் 6.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
பிளிட்ஸ் பிரிவின் நேற்று நடந்த சுற்றுகளில் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், ஜோர்டன் பாரீஸ்ட் மற்றும் பெரசை ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா 18.0 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்க, சிந்தரோவ் 16.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.