காவிரி நதிநீர் விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதியான 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியை முழுமையாக நிறைவேற்றவில்லை என கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு அரசு காப்பீடு வழங்க வேண்டும் மற்றும் ஒரு கிலோ மாங்காய்க்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.