தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் நாசிக் வெங்காயம் சில்லறை விலையில் ரூ.70-க்கும், ஆந்திரா வெங்காயம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் கட்டுப்படுத்த தமிழக அரசே கூட்டுறவுத் துறை மூலம் 3-வது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
இந்த வெங்காயம் சென்னை தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்திற்கு வந்தடைந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் பார்வையிட்டு ரேஷன் கடைகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ ரூ.35 வீதம் விற்பனை செய்யும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.