
உலகிலேயே துருக்கியில் ஐஃபோன் விலை மிக அதிகமாக 2,592 டாலர் (சுமார் ரூ. 2.47 லட்சம்) என முதலிடத்தில் உள்ளது.
இந்தியா 1.36 லட்சம் ரூபாய் விலையுடன் உலக அளவில் 24-வது இடத்திலும், அமெரிக்கா 1.12 லட்சம் ரூபாய் விலையுடன் 39-வது இடத்திலும் உள்ளன.
பிரேசில், எகிப்து, ஹங்கேரி மற்றும் நார்வே ஆகிய நாடுகள் ஐஃபோன் விலை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.