
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைமைப் பண்பு குறித்து பேசியது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்களும் எதிர்வினைகளும் அந்த விளையாட்டுச் சூழலுக்கான கதையோட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது சித்தாந்தத்தைக் குறிப்பதாகவோ கருத்து தெரிவிப்பதாகவோ அதைக் கருதக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.