
சென்னை திருவொற்றியூரில் கந்து வட்டிப் பிரச்சனை காரணமாக துணை நடிகர் பிரதீப் ராஜ் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தன்னை காவல் ஆய்வாளர் மிரட்டியதாக பிரதீப் ராஜ் புகார் அளித்திருந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தன் மகன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரதீப் ராஜின் தாயார் டில்லி ராணி கோரிக்கை விடுத்துள்ளார்.