
முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 20-ம் தேதி தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு, திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.