
ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'தேவராயா' திரைப்படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் சுப்ரியன்வி பிக்சர் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படம் 2027 டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் அறிவிப்பு வீடியோவில், அவர் அரச உடையில் கம்பீரமாகத் தோன்றும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.