
மேட்டூர் அணையில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி நீர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், கால்வாய் பாசனப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்.
மேட்டூர் அணை வரலாற்றில் குடிநீர் தேவைக்காக கால்வாயில் நீர் திறக்கப்படுவது இது 4-வது முறையாகும்.