நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திகில் திரைப்படமான ‘13’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிகா, கதிர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரர், திரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.