
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 13 சதவீதம் குறைவாகவும், தமிழகத்தில் 20 சதவீதம் குறைவாகவும் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வழக்கம்போல் தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.