
புதுக்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட 'வேளாண் மார்ட்' நிறுவனம் கல்வி நிறுவனங்களுக்கு காய்கறிகளை விநியோகம் செய்து வருகிறது.
வெறும் ரூ.10,000 ஆரம்ப முதலீட்டில் தொடங்கிய இந்நிறுவனம் இன்று திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
நிறுவன வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை நிர்வகிக்க பிரத்யேகமாக 'வேளாண் மார்ட்' செயலி உருவாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.