
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பின் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
கலைத் துறையின் பங்களிப்பைப் பாராட்டி தமிழக அரசு ஏற்கெனவே இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவர், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நலனுக்காகவும் பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.