/polimer-news/media/media_files/2026/09/05/chennairainupdate-2026-09-05-08-47-47.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாகவும், இன்னும் 3 நாட்களுக்குள் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 13ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 27 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.