
அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில், இன்டர் மியாமி அணி 7-1 என்ற கோல் கணக்கில் சிஎப் மாண்ட்ரியல் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அபாரமாக விளையாடி 4 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
மெஸ்ஸியுடன் இணைந்து லூயிஸ் சுவாரஸ், காஸ்மிரோ மற்றும் அலெக்சாண்டர் ஷாவ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.