
கடன் வசூலிப்பதற்காக வாடிக்கையாளர்களின் செல்போன், லேப்டாப் அல்லது டேப்லெட்டுகளை முடக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாதனம் வாங்குவதற்காகவே கடன் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் முடக்க அனுமதி உண்டு.
சாதனம் முடக்கப்பட்டாலும் அவசர கால சேவை, எஸ்.எம்.எஸ். மற்றும் அழைப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வங்கிகள் முடக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.