
மராத்தி நடிகையும் பிரபல நாட்டுப்புறக் கலைஞருமான மது காம்பிகர் உடல்நலக் குறைவால் புனேயில் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் படுக்கையிலேயே இருந்து வந்தார்.
அவரது மறைவு மராத்தி திரையுலகினர் மற்றும் கலைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.