
செப்டம்பர் 18-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கும் இந்தியா யு-19 மற்றும் ஆஸ்திரேலியா யு-19 அணிகளுக்கு இடையிலான தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட் மற்றும் சேவக்கின் மகன் ஆர்யாவிர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.