
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப். 27-ல் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.
அரசு பணிகளை கருணை நிவாரணமாக வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.