
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இரு தரப்பும் போரை முடிக்க விரும்புவதாக டிரம்ப் கூறினார்.
குளிர்காலத்திற்கு முன்பாகவே போரை முடிக்க அதிபர் டிரம்ப் உதவுவார் என நம்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.