
டல்லாஸிலிருந்து நியூயார்க் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சக பயணிகளைத் தாக்கிய 67 வயதான ஆர்தர் லெய்ன் லண்டீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளைத் தாக்கிய லண்டீனை, ஓய்வுபெற்ற அதிகாரிகள் உதவியுடன் டேப் மூலம் கட்டி வைத்து விமானம் பால்டிமோரில் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரிசோனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான லாங் ரியாலிட்டி, லண்டீனுடனான தனது பணித் தொடர்பை உடனடியாக முடித்துக்கொண்டது.