
கொரோனா தொற்றுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தொடர்ந்து முகக்கவசம் அணியும் வழக்கம் சிலரிடம் தொடர்கிறது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து மாஸ்க் அணிவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாது என்றும், கிருமிகள் மற்றும் தூசிகள் மட்டுமே தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காற்றோட்டமான மற்றும் அதிக நெரிசல் இல்லாத இடங்களில் ஆரோக்கியமானவர்கள் மாஸ்க் அணிவது தேவையில்லை என குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர் விளக்கியுள்ளார்.