
செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என ஆகஸ்ட் 13 அன்று தவெக அரசு தடை விதித்திருந்தது.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு விதிக்கப்பட்ட இந்தத் தடை, உத்தரவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஆகஸ்ட் 14 அன்று நீக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கை குறித்து அதிமுக ஐ.டி விங் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டு விமர்சித்துள்ளது.